/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 'அதிருப்தி' தி.மு.க.,வினருக்கு அ.தி.மு.க., வலைவிரிக்குது: மு.க.அழகிரி ஆதரவாளர் 'துாண்டிலுக்கு' வரவேற்பு
/
மதுரையில் 'அதிருப்தி' தி.மு.க.,வினருக்கு அ.தி.மு.க., வலைவிரிக்குது: மு.க.அழகிரி ஆதரவாளர் 'துாண்டிலுக்கு' வரவேற்பு
மதுரையில் 'அதிருப்தி' தி.மு.க.,வினருக்கு அ.தி.மு.க., வலைவிரிக்குது: மு.க.அழகிரி ஆதரவாளர் 'துாண்டிலுக்கு' வரவேற்பு
மதுரையில் 'அதிருப்தி' தி.மு.க.,வினருக்கு அ.தி.மு.க., வலைவிரிக்குது: மு.க.அழகிரி ஆதரவாளர் 'துாண்டிலுக்கு' வரவேற்பு
ADDED : பிப் 19, 2026 05:45 AM

மதுரை: மு.க. அழகிரியின் ஆதரவாளர் மன்னன் அ.தி.மு.க.,வில் இணைந்தது எதிரொலியாக மதுரையில் தி.மு.க.,வில் பதவி, மரியாதை கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை வலைக்கும் படலத்தை உள்ளூர் அ.தி.மு.க., கையில் எடுத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அமைச்சர் மூர்த்திக்கு அக்கட்சி தலைமை 'டார்க்கெட்' கொடுத்துள்ளது. இந்நிலையில், அழகிரி ஆதரவாளரான முன்னாள் துணைமேயர் மன்னன், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அப்போது மன்னன் குறிப்பிடுகையில், 'மதுரை தி.மு.க.,வில் தற்போதைய நிர்வாகிகள் மீது பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு உரிய 'மரியாதை' கிடைக்கவில்லை. இன்னும் பலர் அ.தி.மு.க.,வுக்கு தாவும் மனநிலையில் உள்ளனர். 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வை ஜெயிக்க வைப்போம்' என்றார்.
இதையடுத்து நேற்றும் தி.மு.க., முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவரிடம் அ.தி.மு.க.,வினர் பேச்சுவார்த்தை நடத்தி இன்று (பிப்.,19) மாலை பழனிசாமி முன்னிலையில் அவரை கட்சியில் இணைக்க உள்ளனர். இதுதவிர அதிருப்தியில் உள்ள மேலும் பலரிடம் அ.தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.
தி.மு.க.,வினர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா குழுவுக்கு, தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை அ.தி.மு.க.,வுக்கு இழுக்கும் 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
அழகிரி ஆதரவாளர்களை தானே அவர்கள் இழுக்கின்றனர் என தி.மு.க., தலைமை சாதாரணமாக நினைக்க வேண்டாம். அவர்கள் பல தேர்தலில் வியூகம் அமைத்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள்.
அதை தாண்டி தற்போது மன்னன் தரப்பு, நகர் தி.மு.க.,வில் 5 வட்ட செயலாளர், வடக்கு தொகுதியில் 2 பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் பேச்சு நடத்துகிறது. மேலும் மாநகராட்சியில் மேயர், மண்டலத் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. அதை நிரப்பாததால் கவுன்சிலர் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இன்று அ.தி.மு.க.,வில் இணையும் அந்த தி.மு.க., பிரமுகரும் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு தொகுதிகளில் 'பவர் சென்டராக' உள்ளவர். அ.தி.மு.க.,வினரின் 'துாண்டிலில்' 'அதிருப்தி' தி.மு.க.,வினர் சிக்காத வகையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

