ADDED : பிப் 19, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் பழமையான சிதிலமடைந்த கட்டடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்படுகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வாயில் கருப்பு துணி கட்டி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிறகு சங்கத் தலைவர் திருமேனி, செயலாளர் சுரேந்தர், பொருளாளர் மேகவர்ணன் தலைமையில் 65 வழக்கறிஞர்கள் ஊர்வலமாக நான்கு வழிச்சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட அவர்களை இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா கைது செய்தார். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

