ADDED : ஏப் 22, 2025 06:23 AM

மதுரை: ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியின் பதவியை பறிக்ககோரி மதுரையில் நகர் அ.தி.மு.க., சார்பில் மகளிரணியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் சுகந்தி, பெண் கவுன்சிலர்கள், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வளர்மதி பேசுகையில், ''பெண்களை ஆபாசமாக பேசுவது என்பது தி.மு.க.,விற்கு கைவந்த கலை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., ஆட்சி இருந்து வருகிறது. உடனடியாக அமைச்சர் பொன்முடி பதவியை நீக்கி கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராடுவோம். இவ்விஷயத்தில் முதல்வர் மவுனமாக இருக்கிறார் என்றால் பொன்முடி கருத்தை ரசிக்கிறாரா, ஆதரவு தெரிவிக்கிறாரா, அல்லது ஏற்றுக் கொள்கிறாரா என தெரிய வேண்டும்'' என்றார்.