தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2025 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பல்வேறு அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் கறுப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமேம்பாட்டிற்கான அரசு உத்தரவுப்படி, அதற்கான சம்பளம் வழங்க வேண்டும். இது அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தஞ்சை, கோவை தவிர பிற மண்டலங்களில் உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து மதுரை உட்பட ஆறு மண்டலங்களில் மூட்டா, ஏ.யு.சி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மதுரையில் அருள் ஆனந்தர், மதுரைக் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார், வக்ப் வாரிய, சவுராஷ்டிர, யாதவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (அக்.,15) கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us