
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.
அக்.7ல் செவ்வாய் சாற்றப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அக்.13 ல் விளக்கு பூஜை, அக்.14 ல் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்துதல், பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அக்.15 ல் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், அக்.16ல் முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவடையும். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.