/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: 'எய்ம்பா' வலியுறுத்தல்
/
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: 'எய்ம்பா' வலியுறுத்தல்
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: 'எய்ம்பா' வலியுறுத்தல்
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: 'எய்ம்பா' வலியுறுத்தல்
ADDED : நவ 19, 2025 05:32 AM

வாடிப்பட்டி: சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அனைத்து இந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தினர் (எய்ம்பா) அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி., வாழ்ந்த வீடு அருகே அவரது 89வது நினைவு நாள் குருபூஜை விழா நடந்தது. பெருங்குளம் சிவபிரகாச சத்தியஞான தேசிய பரமாச்சர்ய சுவாமிகள், பா.ஜ.,மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர்கள் தியாகராஜன், கீதாஜீவன், செயலாளர் ரகுராம், துணைத் தலைவர் ராமச்சந்திரகுமார் பங்கேற்றனர்.
எய்ம்பா தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் முன்னிலையில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வ.உ.சி., மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். வ.உ.சி.,க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். துாத்துக்குடி விமான நிலையம் மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான ஒரு கப்பலுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். 8,12ம் வகுப்பு பாடத்தில் வ.உ.சி., வாழ்க்கையை பாடமாக வைக்க வேண்டும். அவரது பிறந்த நாளை தியாகத் திருநாளாக அறிவிக்க வேண்டும். பார்லிமென்ட் வளாகத்தில் வ.உ.சி.,க்கு சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

