/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அதிக ஒலி எழுப்பிய பஸ்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
/
மதுரையில் அதிக ஒலி எழுப்பிய பஸ்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
மதுரையில் அதிக ஒலி எழுப்பிய பஸ்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
மதுரையில் அதிக ஒலி எழுப்பிய பஸ்களின் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 11, 2025 03:29 AM

மதுரை: மதுரையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து, போலீஸ் சார்பில் நடைபெற்ற வாகன சோதனையில் அரசு, தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் போக்குவரத்து விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து புகார்கள் வந்தன. போக்குவரத்து உதவி கமிஷனர் வனிதாவின் உத்தரவில் போலீஸ் சார்பில் துணை கமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர் தங்கமணி போலீசார், ஆர்.டி.ஓ., மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அரசு மோட்டார் வாகன விதி 119ன் கீழ், 91 டெசிபலுக்கு மேல் ஒலியை எழுப்பிய பத்துக்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டன. இதில் அதிகபட்சமாக மதுரை-தேனி அரசு பஸ் 112.3 டெசிபல் ஒலியை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஐ., சந்தான குமார், ஆர்.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், சித்ரா, பாலமுருகன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குணசீலன், கிருஷ்ணபிரசாத், தொழில்நுட்ப வல்லுநர்கள் ரவி, கார்த்திகா உள்ளிட்டோர் வாகன சோதனையில் உடனிருந்தனர்.