ADDED : நவ 25, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகரில் வடக்கு, தெற்கு, மத்தி என 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.,) உள்ளன.
இன்று (நவ.,25) ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் ஆர்.டி.ஓ.,க்கள் சித்ரா, பாலமுருகன் ஆகியோர் தலைமையில் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் பயிற்சி ஆய்வாளர்கள், போலீசார் இணைந்து சோதனை செய்தனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிக ஒலிஎழுப்பும் ஏர்ஹார்ன்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரூ.65 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
