ADDED : ஜன 09, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநாடு, மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தனசேகரன், துணைத் தலைவர் பாலசந்தர், பொருளாளர் கோவிந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை செயல்படுத்தக் கோரி பிப்.11 ல் சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், காந்திராஜன் நன்றி கூறினர்.

