/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் சி.பி.ஐ., இறுதி அறிக்கை நகல் வழங்கல்

ADDED : செப் 21, 2025 05:35 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ.,தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் நகல் குற்றம்சாட்டப்பட்ட போலீசாருக்கு வழங்கப்பட்டது.
மடப்புரம் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது.
அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
முதற்கட்ட இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய மதுரை சி.ஜெ.எம்., நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று நீதிபதி செல்வபாண்டி முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. குறைகளை நிவர்த்தி செய்து இறுதி அறிக்கையை சி.பி.ஐ., தரப்பு தாக்கல் செய்தது. கைதான போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், ராமச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இறுதி அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. விசாரணையை நீதிபதி செப்.23 க்கு ஒத்திவைத்தார்.