/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு ஆதரவு
/
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு ஆதரவு
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு ஆதரவு
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு ஆதரவு
ADDED : டிச 08, 2024 04:57 AM
மேலுார் : அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்த இடத்தை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன், இளைஞரணி தலைவர் அருண், முல்லைப் பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆதிமூலம் ஆய்வு செய்தனர்.
பாண்டியன் கூறியதாவது: அரிட்டாபட்டியை பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளதால் மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இத்தீர்மானத்தை சட்டசபையில் டிச.,10ல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமில்லை என்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி விட்டு விவசாயிகளை மட்டுமே சமாதானப்படுத்துகிற வகையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.
தமிழக அரசின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிப்பதாக உள்ளது.
தமிழர் கலாசார பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டிய பகுதியாக அரிட்டாபட்டி உள்ளது. மக்களின் இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு முழுமையான ஆதரவு அளிக்கும்.
இப்பகுதியை தமிழக அரசு வேளாண் பாதுகாக்கப்பட்ட பகுதியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். டெண்டரை ரத்து செய்யும் வரை 48 கிராமங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.
டங்ஸ்டன் அனுமதியை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது என்றார். ஆய்வின் போது வழக்கறிஞர் ஸ்டாலின், விவசாய சங்க மாநில செயலாளர் மகேஸ்வரன், துணை செயலாளர் செந்தில், மாயழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.