/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் அகில இந்திய ஹாக்கி
/
வாடிப்பட்டியில் அகில இந்திய ஹாக்கி
ADDED : டிச 28, 2025 06:11 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாய் மெட்ரிக் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி, எவர்கிரேட் ஹாக்கி கிளப் சார்பில் ஏ.ஆர்.எஸ்., டிராபி 2025 போட்டிகள் ஹாக்கி தந்தை ராஜூ,உதவி மின்பொறியாளர் வீராசாமி நினைவாக நடக்கிறது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ராமன் துவக்கி வைத்தார். ஹாக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் கண்ணன், தொழிலதிபர் தங்கராஜ், டாக்டர் பிருந்தா, தாய் பள்ளி தாளாளர் காந்தி முன்னிலை வகித்தனர். இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராஜா வரவேற்றார். லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடக்கிறது. கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, தமிழகத்தில் இருந்து என 12 அணிகள் பங்கேற்றுள்ளன. வெற்றிபெறும் அணிகளுக்கு 4 சுழல் கோப்பையும், 4 ரொக்க பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ராஜா ஹாக்கி அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

