sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

த.வெ.க.,வுடனான கூட்டணி: பரிசீலிப்போம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

/

த.வெ.க.,வுடனான கூட்டணி: பரிசீலிப்போம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

த.வெ.க.,வுடனான கூட்டணி: பரிசீலிப்போம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

த.வெ.க.,வுடனான கூட்டணி: பரிசீலிப்போம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி


ADDED : செப் 13, 2025 05:30 AM

Google News

ADDED : செப் 13, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த கட்சி, அமைப்புகளுக்கு சொந்த வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. இதனால் அரசு பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து செல்ல கடந்தாண்டு வரை 200 கி.மீ., தொலைவுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு 3 மடங்கு உயர்த்தப்பட்டது.

ஆனால் அதற்கான ரசீதும் வழங்கவில்லை. கொடுக்கப்பட்ட டிக்கெட் கட்டுக்களையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திரும்ப பெற்றுக்கொண்டனர். அன்றைய தினம் அஞ்சலிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பரமக்குடிக்கு இயக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த பஸ்ஸிற்கும் டிக்கெட் கொடுக்கவில்லை. ரசீதும் வழங்கவில்லை. அரசு போக்குவரத்துத்துறையில் ரூ.5 முதல் 10 கோடி வரை முறைகேடு செய்துள்ளது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் அந்தந்த மண்டல அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும்.

தமிழக கோயில்களுக்கு சொந்தமான தங்கத்தை உருக்கி 'பார்'களாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் நகைகளுடன் விலை மதிக்க முடியாத நவரத்தினக் கற்கள் எங்கே. இதுகுறித்து அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

2026ல் ஆட்சியில் அதிகாரம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதுபோன்ற சூழல், த.வெ.க.,வுடனான வாய்ப்பு வந்தாலும் பரிசீலிப்போம். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. எனவே தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது, அ.தி.மு.க., பிரிந்து கிடக்கிறது என்ற சூழ்நிலைகள் மாறும்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்துவது ஓட்டு அரசியலுக்காக மட்டுமே. இது இரு சமூக மக்களின் அமைதியை பாதிக்கும். தமிழகத்தில் 1998 ல் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் அரசியல் தலைவர்களின் பெயர் வைப்பது, அவர்களுக்கு சிலை வைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us