நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் எஸ்.ஆர்.வி. நகரில் எம்.ஜி.ஆர் பிறந்ததினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா, அன்னதானம் நடந்தது.
எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள் செல்வகுமார், மோகன் தாஸ், பாண்டுரங்கன், மகாராஜன், பாலமுருகன், வேல்ராஜ் கலந்துகொண்டனர்.