UPDATED : நவ 30, 2026 12:54 AM
ADDED : நவ 30, 2026 12:54 AM

மதுரை: மதுரை மருத்துவக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சங்க விழா இருநாட்கள் நடந்தது.
1986ல் படித்த இம்மாணவர்களின் நிகழ்ச்சிக்குடாக்டர் கே.ஜி.சீனிவாசன் தலைமை வகித்தார்.மருத்துவ கல்லுாரி டீன்அருள் சுந்தரேஷ் குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சிதம்பரம், மருதுபாண்டியன், செந்தில், மல்லிகா, கார்த்திகேயன் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணிக்கு ராம்லீலா விருது வழங்கப்பட்டது.
நடுவர் ராஜா தலைமையில் 'நவீன தொழில் நுட்பம் மருத்துவ துறைக்கு சாதகமா சவாலா' எனும் தலைப்பில்பட்டிமன்றம் நடந்தது. இதில் பேராசிரியர் ஞானசம்பந்தன், நடிகர்கள் சசிகுமார்,மதுரை முத்து பங்கேற்று பேசினார்.நடைபயணம்,மரம் நடுதல் நிகழ்ச்சிகளும் நடந்தன.
முன்னாள் மாணவர்கள் சார்பில் உடலியல் துறைகட்டடம் புதுப்பிக்கப்பட்டது. டாக்டர்கள் சுஜாதா,பாலாஜி, பிரதீபா, பழனிவேல்ராஜன், கலைவாணி, ஜடாமுனி, பிரபாகர், சரவணன் ஏற்பாடு செய்தனர்.டாக்டர் பீர் முகம்மது நன்றி கூறினார்.
