UPDATED : நவ 30, 2026 12:54 AM
ADDED : நவ 30, 2026 12:54 AM

அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அமலா கைப்பந்து போட்டிகளை பள்ளித் தாளாளர் சாந்தி, முதல்வர் சகாயம் மேரி துவக்கி வைத்தனர்.
நாக் அவுட் முறையில் நடந்த இப் போட்டிகளில் 11 அணிகள் பங்கு பெற்றன. இறுதிப் போட்டியில் டால்பின் மேல்நிலைப் பள்ளி அணி 11-8 என்ற கோல் கணக்கில் ஓம் சாதனா மேல்நிலைப் பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றனது.
மகாத்மா மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடம் வென்றது. அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நான்காவது இடம் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் நல்லமாயன், செந்தில் குமார், ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
