ADDED : மே 19, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு :மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் 2005 -- 2007ல் படித்த மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் பாலமேட்டில்சந்தித்தனர்.
எஸ்.பி.ஐ., வங்கி கிளை துணை மேலாளர் மணிகண்டன், ராம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முன்னாள் மாணவர்கள் 25 பேர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது: கிராமப்புற மாணவர்கள் 20 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியுள்ளோம். பிரதம மந்திரி காப்பீடு செய்ய உறுதி எடுத்துள்ளோம். ஆண்டுதோறும் வசதியற்ற கிராம மாணவர்களுக்கு உதவிகள் செய்ய உள்ளோம். கல்லுாரியில் படித்த 60 பேரில் 25 பேர் சந்தித்துள்ளோம். அடுத்து வரும் ஆண்டுகளில் அனைவரும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.