ADDED : ஜூலை 14, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் 1992 - 95 இளங்கலை வேதியியல் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான மாணவர்கள், 30 ஆண்டுகள் கழித்து நினைவுகளை பகிர்ந்தனர். தற்போது பயின்று வரும் வேதியியல் மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
ஓய்வு பேராசிரியர்கள் தாமரைச் செல்வன், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் பாண்டியராஜா முன்னிலையில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.