ADDED : டிச 20, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1965-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடந்தது.
50 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தங்களது படிப்பு, குடும்பம், பணிபுரிந்த இடம் குறித்து பகிர்ந்து கொண்டனர். பழைய நினைவுகளையும் மீட்டெடுத்து மகிழ்ந்தனர்.
அப்போதைய தலைமை ஆசிரியர் டி.என். வித்யானந்தம் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப் பட்டார். மறைந்த 8 ஆசிரியர்கள், 28 முன்னாள் மாணவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இனிமேல் ஆண்டு தோறும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் எஸ்.ஆர்.மோகன், ஏ.வி.ஜோதிலால், எம்.ஆர்.ஜோதிநாத் செய்திருந்தனர்.

