ADDED : ஜன 04, 2026 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1985 முதல் 2025ம் ஆண்டு வரை எம்.சி.ஏ., படித்த மாணவர்கள் சந்தித்து கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வைத்தார். துறைத் தலைவர் சித்ரா வரவேற்றார்.
சென்னை கேப் ஜெமினி இன்ஜினியரிங் நிறுவன இயக்குனர் அன்பரசன் பாலகிருஷ்ணன் பேசினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது. பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

