ADDED : டிச 09, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று (டிச. 8) நடிகர் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
'அமரன்' திரைப்பட வெற்றியை தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நிலைமாலை அணிவித்து அரிவாள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.