/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமெச்சூர் வானொலி செய்முறை விளக்கம்
/
அமெச்சூர் வானொலி செய்முறை விளக்கம்
ADDED : அக் 11, 2024 05:20 AM
மதுரை: மதுரை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி இயற்பியல் துறையில் உலக விண்வெளி வாரத்தின் ஒரு நிகழ்வாக 'அமெச்சூர் வானொலி' குறித்த செய்முறை விளக்க பயிற்சி பட்டறை நடந்தது.
ஆபத்து, பேரிடர் சூழல், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரங்களில் மக்களை இணைக்கும் பாலமாக இருக்கும் தொடர்பு சாதனமான 'அமெச்சூர் வானொலி' குறித்த விளக்கமும், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளும் பயிற்சியாளர் நாராயணன், மதுரை காமராஜ் பல்கலை கல்லூரி கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர் அம்பேத்கர், ராம்கோ சிமென்ட் உதவி பொதுமேலாளர்(ஓய்வு) சேகர் ஆகியோரால் நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமை வகித்தார்.
இயற்பியல் துறைத்தலைவர், துறைப் பேராசிரியர்கள் மாணவியர் கலந்து கொண்டனர்.

