ADDED : நவ 21, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல மழை பெய்ததில் மக்காச்சோளம் வளர்ந்த நிலையில் உள்ளது.
தற்போது பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் உள்ளது. மக்காச்சோளக் கதிரில் உள்ள குருத்துகளில் நுழைந்து ஒவ்வொரு பகுதியாக சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் பயிரை காப்பாற்றும் வகையில் படை புழுக்களை அளிக்கும் விதமாக மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.

