ADDED : மார் 07, 2024 05:46 AM
மதுரை: அம்ரூத் திட்டம் மூலம் முல்லை பெரியாறு - லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடந்து வரும் பணிகளை கமிஷனர் தினேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்க அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1653.21 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம், பிரதானக் குழாய் பதித்தல்,125 எம்.எல்.டி. சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மதுரை வரை பிரதான குழாய் பதித்தல், மேல்நிலைத் தொட்டிகள், விநியோக குழாய்கள் பதித்தல், வீட்டு இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. லோயர் கேம்ப் பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், பொதுப்பணித் துறை மூலம் தடுப்பணை கட்டும் பணிகள்நடந்து வருகின்றன. பண்ணைப்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரில் கலந்துள்ள இரும்பு தாதுக்களை அகற்றுதல். பெரிய துகள்களை வடிகட்டுதல், தேவையான அளவு குளோரின் கலக்குதல், துரித மணல் வடிப்பான் மூலம் சிறிய துகள்களை வடிகட்டுதல், முழுமையான குளோரின் கலந்து நீரை துாய்மையாக்கப்பட்டு தரைமட்ட தொட்டியிலிருந்து 1400 எம்.எஸ்.குழாய் வழியாக மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் உள்ளிட்டவைகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.
தலைமை பொறியாளர்கள் ரூபன் சுரேஷ், முகம்மதுசபியுல்லா, பாக்கியலெட்சுமி, குழந்தைவேலு பங்கேற்றனர்.

