தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளியில் கண்காட்சி

பள்ளியில் கண்காட்சி

பள்ளியில் கண்காட்சி


UPDATED : நவ 28, 2026 01:01 AM

ADDED : நவ 28, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 01:01 AM ADDED : நவ 28, 2026 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் 'வைப்ஸ் 2026' விக்கிரமங்கலம் 'பிரில்லியன்ட் எக்ஸ்போ' கண்காட்சி நடந்தது.

தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கள்ளர் சீரமைப்புத்துறை கல்வி அலுவலர் ஜவஹர் விளக்கேற்றி துவக்கி வைத்தார். என்.சி.சி., அணிவகுப்பு நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆண்டனிபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் பங்கேற்றனர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றன.

அறிவியல் மாதிரிகள், கணித புதிர்கள், வரலாற்று சிற்பங்கள், தமிழ் இலக்கிய படைப்புகள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் தனித்தனி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆசிரியர் பொன்ராணி நன்றி கூறினார். 25க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us