UPDATED : நவ 28, 2026 01:01 AM
ADDED : நவ 28, 2026 01:01 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி உணவகங்கள், பேக்கரிகள், தனியார் மதுபான பார்களில் நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசந்திரன், சுகாதார பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த பழைய பரோட்டாக்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
தனியார் மதுபான பார்களில் தடைசெய்த பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தடைசெய்த பிளாஸ்டிக், காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.
