UPDATED : நவ 28, 2026 01:00 AM
ADDED : நவ 28, 2026 01:00 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: ‘‘நாச்சிகுளம் ஊராட்சி கரட்டுப்பட்டியில் நாடக மேடையை சீரமைக்க வேண்டும்’’ என, அப் பகுதியினர் வலியறுத்தி வருகின்றனர்.
இங்கு கருப்பசாமி கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் நாடக மேடை கட்டப்பட்டது. தற்போது போதுமான பராமரிப்பின்றி சேதமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளது.
கூரையில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
தரையில் 'டைல்ஸ்' கற்கள் உடைந்து காயங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. சிறுவர்கள் இதில் விளையாடுவதால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறியுள்ளது. தெரு நாய்கள் ஓய்வெடுக்கவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
