/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழைநீர் தேங்கும் இடத்தில் பொங்கும் பாதாள சாக்கடை; மதுரை நகரில் கேள்விக் குறியாகும் குடிநீர் சுகாதாரம்
/
மழைநீர் தேங்கும் இடத்தில் பொங்கும் பாதாள சாக்கடை; மதுரை நகரில் கேள்விக் குறியாகும் குடிநீர் சுகாதாரம்
மழைநீர் தேங்கும் இடத்தில் பொங்கும் பாதாள சாக்கடை; மதுரை நகரில் கேள்விக் குறியாகும் குடிநீர் சுகாதாரம்
மழைநீர் தேங்கும் இடத்தில் பொங்கும் பாதாள சாக்கடை; மதுரை நகரில் கேள்விக் குறியாகும் குடிநீர் சுகாதாரம்
ADDED : அக் 28, 2024 04:41 AM
நகரில் பாதாளச் சாக்கடை பணி, ரோடுகள், முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு என மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் நடப்பதால் பல இடங்களில் ரோடுகளை கடப்பது பெரும் சவாலாக இருந்தது. அதோடு கோரிப்பாளையம், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு, மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலப் பணிகளால் வாகன போக்குவரத்தும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதற்கிடையே வடகிழக்கு பருவ மழையும் சேர்ந்துள்ளது.
ஒருவாரமாக பெய்துவரும் மழையால் செல்லுார், பந்தல்குடி, நரிமேடு, டி.ஆர்.ஓ.,காலனி, முல்லை நகர், சூர்யா நகர், பாண்டியன் நகர், விளாங்குடி, கூடல்புதுார், பெத்தானியாபுரம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
அத்துடன் பல இடங்களில் பாதாளச் சாக்கடைகள் பொங்கும் பிரச்னையும் ஏற்பட்டது. டி.ஆர்.ஓ., காலனி உள்ளிட்ட பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர், கழிவு நீருடன் குடிநீரும் கலக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் டி.ஆர்.ஓ., காலனி உள்ளிட்ட குடிநீர் வினியோகம் ஒருவாரமாக பாதித்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது:
வழக்கமாகவே பல வார்டுகளில் வாரம் ஒருமுறை கூட குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தற்போது பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் குழாய்கள் பதிக்கிறோம் என்ற பெயரில் பல இடங்களில் குடிநீர் குழாய்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். புதிய ரோடுகளையும் தோண்டி அதை சரியாக மூடாமல் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெருக்கடி, பாதாளச் சாக்கடை பொங்குதல், குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் கிடைக்காமை என பல்முனை பிரச்னைகளில் மக்கள் தவிக்கின்றனர். பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மேலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.--
மதுரை, அக். 28-
மதுரையில் பெய்து வரும் தொடர் மழைக்கு இடையே பல இடங்களில் பாதாளச் சாக்கடைகள் பொங்குவதும், குடிநீர் குழாய்கள் உடைப்பு பிரச்னையும் சேர்ந்துள்ளதால் குடிநீர் சுகாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

