/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'த.வெ.க., மாநாட்டுக்கு குடும்பத்தோட வாங்க' கேசரி கொடுத்து அழைப்பு விடுத்த ஆனந்த் தண்ணீர் பாட்டில் மூலம் உறுப்பினர் சேர்க்கை

ADDED : ஆக 16, 2025 03:34 AM

மதுரை: மதுரை தெற்குவாசலில் நேற்று மதியம் நடந்த தொழுகையில் பங்கேற்றவர்களை சந்தித்த த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த், ஆக., 21ல் மதுரையில் நடக்கும் கட்சியின் 2வது மாநில மாநாட்டுக்கு 'குடும்பத்தோடு வாங்க' என்று அழைப்பிதழுடன் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.
மாநாடு பணிகளுக்காக மதுரையில் முகாமிட்டுள்ள ஆனந்த் நேற்று மதியம் தெற்குவாசல் பள்ளிவாசல் வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் குல்லாவும் அணிந்திருந்தார். தொழுகை முடியும் வரை அலுவலகத்தில் காத்திருந்த பின், வெளியே வந்தவர்களிடம் கேசரியுடன் மாநாடுக்கான அழைப்பிதழை கொடுத்து வரவேற்றார். 'மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வாகன வசதி செய்துள்ளோம். கண்டிப்பா வந்துருங்க' என ஒவ்வொருவரிடமும் தெரிவித்தார்.
அவரிடம் பத்திரிகையாளர்கள் 'நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கத்தேர் இழுத்தீர்கள், இப்போது பள்ளிவாசலில் பிரசாரமா' என கேட்டதற்கு 'முஸ்லிம் சகோதரர்கள் மாநாடுக்கு வரவேண்டும் என்பதற்காக வந்தேன்' என்றார்.
பாட்டிலில் கியூ.ஆர். கோடு மாநாடு அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்த நிலையில் தொண்டர்களுக்காக ஒரு லட்சம் எண்ணிக்கையில் அரைலிட்டர் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் விஜய் படத்துடன், கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான கியூ.ஆர். கோடும் ஒட்டப்பட்டுள்ளது.
விஜய் நடந்து செல்வதற்காக 12 அடி உயர மேடையில் இருந்து பார்வையாளர்களுக்கு நடுவில் 300 மீட்டர் நீளத்திற்கு 'ராம்ப் வாக்' அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் இருபுறமும் கட்சிக்கொடி பேனர்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.