ADDED : ஜூன் 15, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழம் பேரையூரில் கிலோ ரூ.240க்கு விற்கிறது.
இப்பகுதியில் நாட்டு ரக நாவல் மரங்கள் உள்ளன. நாவல் பழம் சீசன் இன்னும் துவங்கவில்லை. உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதாக நம்பும் பலரும் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை விரும்பி சாப்பிடுவர்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒட்டுரக நாவல் பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அளவில் சற்றே பெரிதாக இருக்கும் இந்த நாவல் பழங்கள் தற்போது கிலோ 240க்கு விற்கிறது.