ADDED : செப் 15, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் கோட்டைமேடு ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இந்த மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். பழைய அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததால் 2 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது. புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
பிள்ளையார் கோயில் ஊருணி கரையில் பாதுகாப்பற்ற சூழலில் மையம் செயல்படுகிறது. கழிப்பறை வசதி இல்லை. ஒரே அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓடி விளையாட முடியாத நிலை உள்ளது. எனவே புதிய அங்கன்வாடி மையம் கட்ட ஒன்றிய நிர்வாகம் ந டவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.