ADDED : ஏப் 04, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காலியிடங்களை நிரப்புவது, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குமாவட்ட தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வேளாங்கண்ணி, ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலாளர் மேனகா கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இணைச் செயலாளர்கள் பூனம், அங்காளஈஸ்வரி, கவிதா, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் மாநில செயலாளர் சோலையன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் ஷீலா நன்றி கூறினார்.