/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 03, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோடை விடுமுறை வேண்டி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் வரதலட்சுமி கோரிக்கைகளை விளக்கினார். கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் தெய்வராஜ், லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.