ADDED : செப் 08, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லுாரி, மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் அரும்பனுார் புதுாரில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
ஒத்தகடை அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் சகானா தலைமையில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, நோயுற்ற ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், வெறிநாய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திட்ட அலுவலர்கள் சித்ரா, ஆரோக்கிய மேரி, வேணுதேவன் ஏற்பாடுகளைச் செய்தனர்.
