தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அண்ணா பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கப் பணிகள் தாமதமா

 அண்ணா பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கப் பணிகள் தாமதமா

 அண்ணா பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கப் பணிகள் தாமதமா


ADDED : ஜன 08, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ''மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே சந்திப்பு பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் இம்மாத இறுதிக்குள் விரைவாக நிறைவேற்றப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலான பகுதியில் மேம்பாலங்கள், ரோடு விரிவாக்கம் நடந்து வருகிறது. சிவகங்கை ரோட்டில் மேலமடையில் ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. 2023 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 2025 டிசம்பரில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பணியோடு அண்ணா பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு பகுதியில் இருந்து ஆவின் சந்திப்பு வரை ரோட்டை விரிவாக்கம் செய்வதும் அடங்கும். பாலப் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தபின்னும் மேற்கண்ட ரோடு விரிவாக்கம் முடிவடையவில்லை. இந்த சந்திப்பு பகுதியில் பெரிய ரவுண்டானா அமைய உள்ளது. இப்பணிகள் பொங்கலுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் பணிகளை முடுக்கி விட்டனர். சுற்றியுள்ள பகுதியில் இருந்த கடைகள், வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவது, கால்வாய் சரிசெய்தல் உட்பட பணியில் சுணக்கம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக ரோடு சந்திக்கும் இடம் என்பதால் போக்குவரத்தையும் சரிசெய்து கொண்டே பணிகளை நடத்தியதில் சிரமம் ஏற்பட்டது.

தற்போது அப்பணிகள் முடிவடைந்த பின்னும் பணிகள் நடந்தாலும் பொங்கலுக்குள் முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. அதிகாரிகளிடம் விசாரித்ததில், 'ஜனவரி இறுதி வரை பணிகள் நடைபெறும் என தெரிவிக்கின்றனர். காரணம் தற்போதுள்ள 10.5 மீட்டர் ரோடு 18 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரோட்டோரம் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக தோண்டும்போது வீடுகளுக்கான குடிநீர், பாதாள சாக்கடை உட்பட பல்வேறு இணைப்புகள் பாதிக்கின்றன. அவற்றை சரிசெய்ய வேண்டியுள்ளது. பல வீட்டு உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பழைய குழாய்களை நீக்கி புதிய குழாய்களை பொருத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலும் பணிகளில் சுணக்கம் உள்ளது. இருப்பினும் ஜனவரிக்குள் ரோடு சீரமைக்கப்பட்டு விடும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us