நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா அன்னதானத்தை நவ.22ல் தொடங்கி வைத்தார். நேற்று துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழு உறுப்பினர் பொம்ம தேவன் அன்னதானத்தை துவக்கினர். 50 நாட்களாக வழங்கப்பட்ட அன்னதானம் நேற்று நிறைவடைந்தது. ஏற்பாடுகளை மதுரை தலைவர் குருசாமி, செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் மனோகரன், உப தலைவர் சுப்பையா செய்திருந்தனர்.