நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் முன்னாள் விமான படையினர் நலச்சங்க ஆண்டு விழா தலைவர் ரகுநாதன் தலைமையில் நடந்தது.
செயலாளர் முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். நிர்வாகி அழகர்சாமி தொகுத்து வழங்கினார். 80 வயதை கடந்த 14 வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. உதவி செயலாளர் சோலைக்குட்டி நன்றி கூறினார்.