நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கீழவளவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமையாசிரியை வெற்றிச்செல்வி வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பாராஜூ தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி மனோரஞ்சிதம் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அழகுமீனா, ஜெயசித்ரா, மேற்பார்வையாளர் கீதா பேசினர்.
ஆசிரியை உமாவதி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியர்கள் கீதா, இந்திரா, சாதனா ஒருங்கிணைத்தனர். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.