நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தும்பைப்பட்டி கோமதி அம்பிகை சங்கரலிங்கம் சுவாமி மற்றும் சங்கரநாராயண சுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
இதை முன்னிட்டு சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டது. உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் செய்திருந்தனர்.