ADDED : ஆக 26, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து 2ம் ஆண்டு வருடாபிஷேகம் அதேநாளான நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யகாவாசனம், பஞ்சகவ்ய,யாக பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம்,108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. கண்ணன் பரசுராம் பட்டர் தலைமையில் அர்ச்சகர் செந்தில் குழுவினர் பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா கமிட்டி நிர்வாகிகள் வெங்கடரமணன், சங்கரன்,சேதுராமன், அழகர்சாமி, செந்தில்குமார், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
