ADDED : மார் 17, 2025 06:19 AM
சோழவந்தான் : சோழவந்தான் எம்.வி.எம்., கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் மருது பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளி மயில் முன்னிலை வகித்தனர். முதல்வர் செல்வம் வரவேற்றார். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கராத்தே, பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி பேசினார். துணை முதல்வர் தீபாராகினி, ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
கள்ளிக்குடி: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் கோவிந்தம்மாள் தலைமையில் நடந்தது. கள்ளிக்குடி ஊராட்சி உறுப்பனர் சீதாலட்சுமி குத்து விளக்கு ஏற்றினார். ஊராட்சி தலைவர் மகேந்திரன், கவுன்சிலர் ராஜகுரு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். சமூக ஆர்வலர்கள் முத்துக்கருப்பன், மங்கையர்கரசி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். மேலாண்மை குழுத் தலைவர் சுந்தரி தலைமை ஆசிரியர் பாண்டியம்மாள், ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி, ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.