தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆண்டு பொதுக்குழு கூட்டம்

ஆண்டு பொதுக்குழு கூட்டம்

ஆண்டு பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 30, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை செக்கானுாரணியில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன், இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பொருளாளர் ஆனந்தன் நிதியறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் முத்தழகு, ராமர், முத்துக்குமார், குருராஜன், முருகானந்தம், நாகேஸ்வரன் பேசினர்.

வாடிப்பட்டி முதல் சோழவந்தான், செக்கானுாரணி வழியாக திருமங்கலம் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும், கப்பலுார் டோல்கேட் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும், நீக்கப்பட்ட உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில இணைச்செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us