ADDED : ஆக 13, 2025 02:18 AM

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பெருங்குடி: மதுரை பெருங்குடியை சேர்ந்த கருமலை சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான தங்கேஸ்வரன் 36, தலைமறைவாக இருந்தார். நேற்று இரவு வலையங்குளம் பகுதியில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற தங்கேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை சிவகுமார் 57, கம்ப்ரஸர் டிராக்டரின் டிரைவர். நேற்று மாலை அய்வத்தாம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறைகளில் துளை போட, டிராக்டரை பின்பக்கமாக இயக்கினார். திடீரென டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்குள் சிக்கிய சிவகுமார் இறந்தார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
11 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
சோழவந்தான்: சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் எஸ்.ஐ., முருகேசன் உட்பட போலீசார் கரட்டுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியே வந்த பள்ளபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சரவணனை 46, சோதனை செய்தனர். அவரிடம் 11 கிலோ கஞ்சா இருந்ததால் அவரை கைது செய்தனர்.

