/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது
/
உசிலம்பட்டி ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஏப் 01, 2025 04:37 AM

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏட்டு முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டி ஏட்டு முத்துக்குமார் மார்ச் 27 அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த தகராறில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி பொன்வண்ணனை மார்ச் 29 ல் தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். மேலும் அவருடன் இருந்த சிவனேஸ்வரன், பாஸ்கரன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து மார்ச் 30, உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இக்கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த நாவார்பட்டி பிரதாப் 24, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் சென்றது. எஸ்.ஐ., முருகராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவரை உசிலம்பட்டி நகர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.