/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை; ரூ. 87 ஆயிரம், சேலைகள் பறிமுதல்

ADDED : அக் 16, 2025 04:59 AM

மதுரை: மதுரையில் மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.87 ஆயிரம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மேலமாரட் வீதியில் உள்ள இந்த அலுவலகத்தில் அலுவலர்கள் தீபாவளி வசூல் நடத்துவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, பாரதிபிரியா, சூரியகலா, ரமேஷ்பிரபு கொண்டகுழு நேற்று சோதனை நடத்தியது. அப்போது உதவி வருவாய் அலுவலர் லட்சுமணனிடம் கணக்கில் வராத ரூ. 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பில் கலெக்டர்கள், ஊழியர்களிடமிருந்து ரூ.42 ஆயிரம் என மொத்தம் ரூ. 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதவிர 15க்கும் மேற்பட்ட புதிய சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் கூறுகையில் 'இச்சம்பவத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை. அப்பணத்திற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லையெனில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த சோதனையை அடுத்து மாநகராட்சி, அரசு அலுவலகப் பணியாளர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.