/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் செயின் திருவிழா
/
தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் செயின் திருவிழா
ADDED : அக் 16, 2025 04:59 AM
மதுரை: மதுரை தங்கமயில் ஜூவல்லரியில் தந்தேராஸ், தீபாவளி விழாக்களை முன்னிட்டு நாளை (அக்.17) முதல் செயின் திருவிழா துவங்குகிறது.
தங்கமயிலில் சிறப்பு சலுகையாக நாளை முதல் தீபாவளி வரை நான்கு நாட்கள் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து செயின்களும் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவன தனித்துவ செயின்களை வாடிக்கையாளர்கள் அணிந்து இத்தீபாவளியைகொண்டாடும் வாய்ப்பாக இந்த செயின் திருவிழா சிறப்பு ஆபர் வழங்கப் பட்டுள்ளது.
நான்கு நாட்களும் வாடிக்கையாளர் வாங்கும் 6 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 1.99 சதவீதம், 6 சதவீதத்திற்கும் மேல் சேதாரம் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதம் சேதாரம் மட்டும் கணக்கிடப்படும். மேலும் வைர நகைகளுக்கு ரூ. 5000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு. சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு உண்டு.