நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தீபாவளியை முன்னிட்டு மதுரை புதுார், காதக்கிணறு மயானங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். தென்மண்டல தலைவர் அமுதன் புத்தாடைகளை வழங்கினார். பா.ஜ., கலை, கலாசார பிரிவு செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.