ADDED : ஆக 11, 2025 04:32 AM
மதுரை: மதுரையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக போலீசார் சார்பில் உறுதிமொழி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக 753 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 542 வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 1922.7 கிலோ கஞ்சா, 231 டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா விற்பனை தொடர்பாக 1105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 755 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 6079.4 கிலோ குட்கா, 31 டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் கூறுகையில் ''மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகள், 30 கல்லுாரிகள், 38 தொழிற்கல்வி பயிற்சி நிலையங்களில் போதைப் பொருள்களுக்கு எதிராக 'கிளப்' அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளி, கல்லுாரிக்கும் தலா ஒரு கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டு, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மூலம் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன'' என்றனர்.

