/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரில் டங்ஸ்டன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
மேலுாரில் டங்ஸ்டன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2024 05:10 AM
மேலுார் : மேலுாரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை எம்.பி., வெங்கடேசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மேலுார் மண்ணை காக்கும் போராட்டத்தில் சர்வ கட்சியினரும் இணைந்து போராட வேண்டும்.
மத்திய அரசு வளத்தையும் வரலாற்றையும் அழிக்க ஏலம் விட்டுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது'' என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் ராஜேந்திரன், கணேசன், பொன்னுத்தாய், கண்ணன், மணவாளன், தனசேகரன் கலந்து கொண்டனர்.

