/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுப்பானடி சின்னக்கண்மாயை மீட்டு வாழ்வாதாரம் காக்க வேண்டும்; பூங்கா அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தல்

ADDED : ஏப் 02, 2025 03:47 AM

மதுரை : 'அனுப்பானடி சின்னக் கண்மாயில் பூங்கா அமைப்பது தேவையற்றது, கண்மாயை மீட்டு எங்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
மதுரை அனுப்பானடி கேட்லாக் பகுதியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் சின்னக் கண்மாய் உள்ளது. பல்வேறு காரணங்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் கண்மாயை மூடினர். அதன்பின் அங்கு குப்பை கொட்டுவதும், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதும் துவங்கியது. எண்ணற்ற சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து, கார், டூவீலர், கனரக வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் மாறியது.
பின்னர் 2020ல் மாநகராட்சி சார்பில் இடத்தை பாதுகாக்கும் நோக்குடன் அறிவிப்பு பலகையை வைத்து பராமரித்ததால் நிலைமை கொஞ்சம் மாறியது. தற்போது மாநகராட்சியின் கீழ் வராததால், மீண்டும் அந்த இடம் பராமரிப்பு இன்றி பழைய நிலைக்கு மாறி விட்டது.
பல வார்டுகளில் சேகரிக்கும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் இங்கு கொட்டுகின்றனர். கண்மாய் எதிரே மருத்துவமனை, மரங்கள் இருந்தும் அபாயகரமான முறையில் குப்பையை எரிக்கின்றனர். இங்கு பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பூங்கா வருவதற்கு இப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் மோகன் கூறியதாவது: பூங்காவை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம். கண்மாய்க்குள் மூடை மூடையாக குப்பையை கொட்டுகின்றனர். மருத்துவ கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை, காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. கண்மாயை தெப்பக்குளம், நாகனாகுளம் போல் சுற்றுச்சுவர் கட்டி, நடைப்பயிற்சி செய்ய ஏதுவாக மாற்றவும் வேண்டும். இதுகுறித்து அமைச்சர் நேருவிடம் மனு அளிக்க உள்ளோம். கண்மாயை பராமரித்து, மழைநீரை சேகரித்து வந்தால், எந்தக் காலத்திலும் தண்ணீர் பிரச்னை வராது. எனவே பூங்கா அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். என்றார்.